2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

கௌரவிப்பு

Freelancer   / 2023 மார்ச் 13 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

வலப்பனை கல்வி வலயத்தில்  ஆரம்பப் பிரிவு பாடசாலைகள் மற்றும் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில் ஓய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களின் சேவை நலனை பாராட்டி அவர்களை கௌரவிக்கும்  நிகழ்வு  சனிக்கிழமை (11) காலை இடம்பெற்றது.

இராகலை உயர் நிலை பாடசாலையின் பாரதி மண்டபத்தில் ஆரம்பப் பிரிவு பாடசாலைகளின்  உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.யசோதரன் தலைமையில்  இடம் பெற்றது.

இந்த நிகழ்வில்,  அதிதிகளாக வலப்பனை கல்வி வலயப் பணிப்பாளர் திருமதி டி.எம்.எம்.திஸாநாயக்க, முன்னாள் கல்விப் பணிப்பாளர் பி.பி.நவரத்ன,உட்பட உதவி கல்விப் பணிப்பாளர்களான வி.யோகராஜ், ஏ.கே.அலிக்வெல உட்பட அதிபர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் 2019 ஆம் ஆண்டு  தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரை சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு தங்களை அர்ப்பணித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X