Kogilavani / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஷ்
தலவாக்கலையில் இயங்கிவரும் பசும்பால் சேகரிக்கும் நிலையமானது (நீயுடெல் டிக்கோயா பசும்பால் நிலையம்), இப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்களிடமிருந்து சேகரிக்கும் பசும்பாலை கடந்த இரண்டு நாட்களாக திருப்பி கொடுத்துள்ளது என்று கால்நடை பண்ணையாளர்கள் நேற்று(17) தெரிவித்தனர்.
தலவாக்கலைக்கு உட்பட்ட தோட்டங்களைச் சேர்ந்த கால்நடை பண்ணையாளர்கள் இந்நிலையத்துக்கு தினமும் இரண்டு வேளைகள் பசும்பாலை வழங்குகின்றனர்.
நாளென்றுக்கு 2,600 லீற்றர் பாலை சேகரிக்கும் இந்நிலையம், சுமார் 500 லீற்றருக்கு மேற்பட்ட பசும்பாலை, பண்ணையாளர்களிடம் திருப்பி அனுப்பி விடுவதாக கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தாம் வழங்கும் பாலில் கொழுப்புச் சத்து குறைவு என்பதை காரணம் காட்டியே, பால் லீற்றர் கணக்கில் திருப்பி அனுப்பப்படுவதாகவும் அதிகாலை 5 மணிக்கு கரக்கப்படும் பாலானது 10 மணிக்கே சேகரிக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக, பால் சேகரிப்பு நிலையத்தின் அதிகாரியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,
'எமது நிலையத்தில் தலவாக்கலை, வட்டகொடை, டெவன், லோகி, ட்ருப் உட்பட்ட பல தோட்டங்களிலிருந்து நாளொன்றுக்கு 2,600 லீற்றர் பால் சேகரிக்கப்படுகின்றது.
இரு வேளைகள் சேகரிக்கும் பாலில் 4.0 சதவீதம் கொழுப்பும் 26க்கு மேல் மீட்டரும்;; காட்டப்பட வேண்டும். ஆனால், ஒருசில பண்ணையாளர்கள் வழங்கும் பசும்பாலில் இவைகள் குறைவாகவே காணப்படுகின்றன. இதனால், ஏனைய பண்ணையாளர்கள் வழங்கும் பாலும் கெட்டுவிடும். இதனால்தான் தரமான பாலை கேட்கின்றோம்' என்றார்.
'தரமான பாலை வழங்குவதற்காக நாம் புண்ணாக்கு மற்றும் மோலஸ் போன்ற சத்துணவுகளை பண்ணையாளர்களுக்கு வழங்கி வருகின்றோம். மாடுகளை நன்கு பராமரிக்க கடனுதவிகளையும் எமக்கு பால் வழங்குபவர்களின் வீட்டு நிகழ்வுகளுக்கு இலவச பண உதவிகளையும் செய்து வருகின்றோம். இவ்வனைத்தையும் பெற்றுக்கொண்டு தரமாற்ற பாலை எமக்கு தருவது நியாயமற்ற விடயமாகும்.
இவ்வாறு குறைக்கூறுபவர்கள் எம்மிடம் முறையிடும் பட்சத்தில் அவர்களின் குறைகளை தீர்க்க நாம் தயாராகவுள்ளோம்' என தெரிவித்தார்
'பால் சேகரிப்பு நேரங்களில் மாற்றம் ஏற்பட்டாலும் அதில் கொழுப்பு குறையும் வாய்ப்பில்லை. பாலில் மாற்றங்கள் ஏதேனும் நிகழ்ந்தால்தான் கொழுப்பு குறையும்' என அவர் சுட்டிக்காட்டினார்.
37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago