Sudharshini / 2016 ஜூன் 06 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
ஊவா, பரணகம லக்கிலேண்ட் தோட்டக் குடியிறுப்புத் தொகுதியிலுள்ள குப்பைக் குழியிலிருந்து, கடந்த 31ஆம் திகதி சிதைவடைந்த நிலையில் சிசுவொன்று சடலமாக மீட்கப்பட்டது. இந்த சிசுவின் தாய் என சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரை, ஞாயிற்றுக்கிழமை (05) மாலை கொழும்பில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
சிசுவின் தாய் குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றினடிப்படையில்,ஞாயிற்றுக்கிழமை(05) கொழும்பில் வைத்து மேற்படி பெண் கைதுசெய்யப்பட்டார்.
இப்பெண், லக்கிலேன்ட் தோட்டத்திலுள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்தபோது சிசுவைப் பிரசவித்துள்ளதாகவும் பின்னர் சிசுவை குப்பைக் குழிக்குள் வீசிவிட்டு, மீண்டும் கொழும்புக்கு சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து ஊவா, பரணகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குப்பைக் குழியிலிருந்த சிசுவின் சடலத்தை நாயொன்று கௌவிக்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .