2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சைட்டத்துக்கு எதிராக இருவேறு பகுதிகளில் ஆர்பாட்டம்

Kogilavani   / 2017 மார்ச் 26 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

மாலம்பே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை மூடக்கோரியும் அந்நிறுவகத்தைத் தடைசெய்யக் கோரியும் கினிகத்தேனை, லக்‌ஷபான ஆகிய பகுதிகளில், ஆர்ப்பாட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டன. பல்கலைக்கழக மாணவர்களும் பொதுமக்களும் இணைந்து, இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சைட்டம் திட்டத்தினால், பொதுமக்களுக்குக் கிடைக்கும் இலவச வைத்தியசேவை பாதிப்படைவதுடன், இலவசக் கல்வி முறைமையும் வியாபாரமயமாகுவதாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கூறினர்.

சைட்டத்துக்கு எதிரான சுலோக அட்டைகளை ஏந்தியாவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X