2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சாரதிகளுக்கு அலைபேசி தடை

Kogilavani   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

பஸ்ஸை செலுத்திக்கொண்டு அலைபேசியில் உரையாடுவதை தடுக்கும் வகையில், இலங்கை போக்குவரத்துச் சபையின் ஹட்டன் டிப்போவுக்கு சொந்தமான பஸ் வண்டிகளில், ஸ்டிக்கர்கள் இன்று (17) ஒட்டப்பட்டன.

பஸ் வண்டியை செலுத்தும் சாரதிகள், பயணிகளின் பாதுகாப்பை கருத்திற்கொள்ளாது அலைபேசியில் உரையாடுவதால் பாரிய விபத்துகள் இடம்பெறுகின்றன. நாவலப்பிட்டியவில், அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்துக்கு, அந்த பஸ்ஸின் சாரதி, பஸ்ஸை செலுத்திக்கொண்டே அலைபேசியில் உரையாடியதே காரண​மென கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், அலைபேசியில் உரையாடிக்கொண்டே, சாரதிகளை பஸ்களை செலுத்தக்கூடாது என்றும். அந்த நடைமுறை உடன் அமுலுக்கு வரும் வகையில் விசேட ஸ்டிக்கர்கள், பஸ் வண்டிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

ஸ்டிக்கர்களில் கூறப்பட்டுள்ள அறிவித்தல்களையும் மீறி அலைபேசியில் உரையாடும் சாரதிகளுக்கு எதிராக பயணிகள் முறைப்பாடு தெரிவிக்கும் வகையில் தொலைபேசி இலக்கங்களும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில், சாரதிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என, ஹட்டன் டிப்போ மேற்பார்வையாளர் ரோகன த சில்வா தெரிவித்தார்

இலங்கை போக்குவரத்து சபையில் தலைவர் ரமல் சிறிவர்த்தனவின் ஆலோசனைக்கமைய, ஸ்டிக்கர் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .