Sudharshini / 2016 மே 10 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கியூ தோட்ட தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்த மேற்படி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (வயது 35) என்பவர் சிறுத்தையின் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (10) காலை தேயிலை மலையில் வேலை செய்துக்கொண்டிருந்தவரை, தேயிலை செடியின் கீழ் பதுங்கியிருந்த சிறுத்தை, திடீரென பாய்ந்து தாக்கியுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்கான மேற்படி நபர், தொடர்ந்தும் டிக்கோயா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .