Niroshini / 2016 மே 06 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கு.புஸ்பராஜ்
அக்கரப்பத்தனை, அயோனா தோட்டத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
இத்தோட்டத்தில் கடந்த ஒருவாரகாலமாக 4 சிறுத்தைகள் தேயிலைச் செடியின் அடிவாரத்தில் பதுங்கி இருப்பதுடன் இரவு நேரங்களில் கோயிலுக்கு அருகிலுள்ள ஆலமரத்தில் இருப்பதாகவும் பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.
இது தொடர்பில் அக்கரப்பத்தனை பொலிஸ் மற்றும் நல்லதண்ணி வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (04) இரவு 9 மணியளவில் அத்தோட்டத்துக்கு வருகைத் தந்த நல்லத்தண்ணி வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள், சிறுத்தைகளை விரட்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதேவேளை, அல்பியன், பிரஸ்டன், மோர்சன், டொரிங்டன் பகுதிகளிலும் சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் நகரத்திலிருந்து போடைஸ் வழியாக டயகமைக்கும் செல்லும் பிரதான வீதியில், இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவதால் அப்பாதையின் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்தனர்.
எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரிகள் இதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .