Kogilavani / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பாநூ கார்த்திகேசு
பச்சைத் தேயிலைக் கொழுந்துகளை உற்பத்தி செய்வதற்காக செலவிடப்படும் தொகையை விட குறைந்த விலைகளிலேயே கொழுந்துகள் கொள்வனவு செய்யப்படுவதால் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் தோட்டங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர் தேசிய சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் லால் பிரேம் நாத் தெரிவித்தார்.
கொழும்பு சமூக மற்றும் கலாசார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்;. இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
'தேயிலைக்கு என நிர்ணயிக்கப்பட்ட விலையை வழங்க முடியாது. பச்சைத் தேயிலை கொழுந்து ஒரு கிலோ கிராம் 80 ரூபாய் என 100 நாட்கள் அரசாங்கத்தின் போது நிர்ணயிக்கப்பட்டது. எனினும், அதனடிப்படையில் பச்சைத் தேயிலை கொள்வனவு செய்யப்படுவதில்லை.
தேயிலைக் கொழுந்தின் தரத்தை அடிப்படையாகக் கொண்டே அவை கொள்வனவு செய்யப்பட்டன' என ஒருங்கமைப்பாளர் தெரிவித்தார்.
'அரசினால் வழங்கப்படுகின்ற மானிய உரம்; சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு கிடைப்பது இல்லை. சுமார் 1 மில்லியன் மக்கள், சிறுதேயிலை தோட்டத்தை நம்பியே தமது ஜீவனோபாயத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலை நீடிக்குமேயானால்;, தேயிலை உற்பத்தியில் மந்த நிலை ஏற்படும் என்பதுடன்;, சந்தையில் இலங்கை தேயிலையின் தரம் இறங்குவதற்கும் வாய்ப்பாக அமையும்' என அவர் சுட்டிக்காட்டினார்.
'அரசாங்கம், இலங்கை தேயிலை பரிபாலன சபை, சிறு தேயிலைத் தோட்ட தொழிலாளர் சம்மேளனம் இணைந்து இதற்கு தீர்வை வழங்க முன்வர வேண்டும். அரசாங்கம் இதற்கான தீர்வை எட்டுவதற்காக ஒரு நாள் தாமதித்தாலும் சிறு தேயிலைத் தோட்ட உற்பத்தியாளன் ஒரு மாதம் பட்டினியால் வாட வேண்டிய நிலை ஏற்படும். இதற்கு முறையான தீர்வு ஒன்று எட்டப்படாத வரை தாங்கள் வீதியில் இறங்கி போராடவும் தயங்க மாட்டோம்' என அவர் மேலும் கூறினார்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026