Sudharshini / 2015 ஒக்டோபர் 11 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
சிறுமியை கட்டியணைத்து முத்தமிட்டதாக கூறப்படும் தேரரை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு தெஹியத்தகண்டி நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தெஹியத்தகண்டி பகுதியிலுள்ள விகாரையொன்றைச் சேர்ந்த தேரர் ஒருவர் விகாரையின் அருகேயுள்ள வீடொன்றுக்குச் சென்று, அங்கிருந்த சிறுமியை கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார்.
இச்சம்பவத்தை அறிந்த சிறுமியின் பெற்றோர், இதுதொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் தேரரை கைதுசெய்த பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார். இதேவேளை, சிறுமியை தெஹியத்த கண்டி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் அவர் தொடர்பிலான மருத்து அறிக்கையை நீதிமன்றில் சமர்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026