2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சிறுவனின் உயிர் குடித்த ஐஸ் கிறீம்

Sudharshini   / 2015 நவம்பர் 11 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஞ்சன குமார் ஆரியதாஸ

வீதிக்கு மறுபுறத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஐஸ் கிறீம் லொறியில் ஐஸ் கிறீம் வாங்கிக்கொண்டு வீதியை கடக்க முயன்ற 8 வயதான சிறுவன் மீது லொறி மோதியதில் அச்சிறுவன் உயிரிழந்துள்ளான் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை-தம்புள்ளை பிரதான வீதியில் உள்ள விஹாரைக்கு அண்மையிலேயே செவ்வாய்க்கிழமை  (10) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  இவ்விபத்தில்,  வத்தேகம பன்வில பிரதேசத்தைச் சேர்ந்த நிர்மல் ஜயதிஸ்ஸ (வயது 08) என்ற சிறுவனே மரணமடைந்துள்ளார்.

கிராமத்தவர்களுடன் சேர்ந்து சுற்றுலா சென்ற குழுவினர், தம்புள்ளைக்கு வருகைதந்துள்ளனர். மரணமடைந்த இந்த சிறுவன் தனது பாட்டியுடன் வருகைதந்துள்ளார்.

வீதியின் ஒரு பக்கத்தில் பாட்டி நின்றுக்கொண்டிருக்க மறுபக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐஸ்கிறீம் லொறியை நோக்கி அச்சிறுவன் ஓடியுள்ளான்.

ஐஸ் கிறீமை வாங்கிவிட்டு பாட்டியை நோக்கி ஓடிவரும் போதே அவ்வீதியால் மிக வேகமாக வந்த லொறி அச்சிறுவனின் மீது மோதியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன், தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாக தெரிவித்த தம்புள்ளை பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .