Princiya Dixci / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் ,பொல்பித்தியாகம பகுதியில் சகோதரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, ஒருவர் மற்றையவரை பொல்லால் தாக்கியதில் குறித்த சகோதரன் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று புதன்கிழமை (16) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் தல்பத்வௌ பகுதியைச் சேர்ந்த 38 வயதான எஸ்.பீ.ஆர். சமந்த பண்டார என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேதப் பரிசோதனையின் பொருட்டு குருநாகல் வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், தாக்குதல் நடத்திய சந்தேகநபரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago