Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ, டி.ஷங்கீதன்
மஸ்கெலியா, கவரவில பாக்ரோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு, கல்வி இராஜங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் பணிப்புரை வழங்கியுள்ளார்.
மஸ்கெலியா கவரவில மற்றும் பாக்ரோ ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை இன்று (25) நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'கடந்த சில மாதங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தில் பல்வேறு பகுதிகளிலும் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. நான் நேரடியாக சில இடங்களுக்கு விஜயம் செய்து பார்த்த பொழுது முறையான வடிகால் அமைப்பு வசதி இல்லாத காரணத்தினாலேயே சில இடங்களில் வெள்ளபெருக்கு இடம்பெற்றுள்ளது.
இது குறித்து நான் நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சட்டவிரோத கட்டடங்களை அகற்றுவதற்கும் வடிகால் அமைப்பை சீராக்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளளேன்' என்றார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் அமைத்து கொடுப்பது தொடர்பில் அமைச்சர் திகாம்பரம் நாடு திரும்பியதும், அவருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களையும் உபகரணங்களையும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago