Kogilavani / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு. இராமச்சந்திரன்
ஹட்டன், டிக்கோயா தரவலைப் பகுதியில், சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட பலாங்கொடையைச் சேர்ந்த மூவரை, ரிக்காடனிலுள்ள விசேட அதிரடிப்படையினர், சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
இவர்கள், தரவளை விளையாட்டு மைதானத்தை அண்மித்தப் பகுதியிலுள்ள மண்திட்டை, பெக்கோ இயந்திரத்தினால் வெட்டி, இரண்டு லொறிகளில் மண் ஏற்றிக்கொண்டிருந்த போதே, விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, பெக்கோ இயந்திரம் மற்றும் 2 லொறிகளையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி மூவரும் பெக்கோ, இயந்திரம் மற்றும் லொறிகளுடன் நல்லத்தண்ணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நல்லத்தண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026