Editorial / 2019 செப்டெம்பர் 02 , மு.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ஆ.ரமேஸ்
ஹட்டன் - யூனிபீல்ட் தோட்டம், வெலிங்டன் பிரிவிலுள்ள தோட்ட பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த 3 சடலங்கள் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளமையால், அங்கு நேற்று (1) பரபரப்பானச் சூழல் ஏற்பட்டது.
வெலிங்டன் தோட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், நேற்று (1) காலை புல்வெட்டுவதற்காக அப்பகுதிக்குச் சென்றபோது, சடலங்கள் கிடப்பதைக் கண்டு பிரதேச மக்களின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார். இது தொடர்பில் பின்னர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதில் 24, 68, 70 ஆகிய வயதுகளில் உயரிழந்தவர்களின் சடலங்களே இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டுள்ளன என்றும் மண்டை ஓடுகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் ஒரு சடலம் புதைக்கப்பட்டிருந்தக் குழியைத் தோண்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பில், ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
49 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026