2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சடுதியாக அதிகரித்த மரக்கறியின் விலை

R.Tharaniya   / 2025 ஜூன் 16 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ. 1000 முதல் 1200 வரையிலும், கேரட் ஒரு கிலோ ரூ. 700 முதல் 800 வரையிலும், போஞ்சி ஒரு கிலோ  ரூ. 600 முதல் 650 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மிளகாய் ஒரு கிலோ  ரூ. 800 முதல் 900 வரையிலும்,பாகற்காய் ஒரு கிலோ ரூ. 400 முதல் 450 வரையிலும்,பூசணி ஒரு கிலோ ரூ. 300 முதல் 320 வரையிலும்,கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 650 முதல் 700 வரையும்,பயிற்றங்காய் ஒரு கிலோ ரூ. 480 முதல் 500 வரையும், லீக்ஸ் ஒரு கிலோ ரூ. 450 முதல் 500 வரையும், புடோல் ஒரு கிலோ ரூ. 400 முதல் 450 வரையும், பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ. 500 முதல் 520 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மரக்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மரக்கறிகளை முறையாக வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காய்கறிகளின் மொத்த விலைகள் அதிகரித்துள்ளது என்றும் மழைக்காலம் தொடர்ந்தால்,  மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என்றும் இதனால் நுகர்வோர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வார்கள் என்று மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்தனர். 

எச். எம். சுதத் ஹேவா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .