Kogilavani / 2017 ஜூலை 04 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}




கு.புஸ்பராஜா
“சட்ட உதவி ஆணைக்குழுவின் சேவைகளை, பெருந்தோட்ட மக்கள் போதியளவில் பெற்றுக்கொள்வதில்லை. ஒவ்வொரு பிரஜையும், சட்டங்கள் தொடர்பாக அறிந்திருப்பது அவசியமாகும். சட்டங்களை சரியான முறையில் கடைபிடிப்பது போன்றே, ஒரு பிரஜைக்கு சட்ட அறிவும் அவசியமாகும்” என, பிரிடோ நிறுவன திட்ட இயக்குநர்
எஸ்.கே.சந்திரசேகரன் தெரிவித்தார்.
சட்ட உதவி ஆணைக்குழுவின் அனுசரணையோடு, நானுஓயா நாவலர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் உரையாற்றிய அவர்,
“மலையக மக்கள், இன்று அதிகமான சட்டப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பதுடன், அதற்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
“பெரும்பாலான புலம்பெயர் அபிவிருத்தி பங்காளரின் குடும்பங்களில், பல பிரச்சினைகள் உள்ளதுடன், சில குடும்பங்கள் விவாவகரத்து, ஜீவனாம்சம் போன்ற பிரச்சினைகளில் சட்ட உதவிக் கிடைக்காமையினால் சிரமப்படுவதாக அறிய முடிகிறது.
“இவர்களும் ஹட்டன், நுவரெலியாவில் அமைந்துள்ள சட்ட உதவி ஆணைக்குழுவின் கிளை காரியாலயங்களில் உள்ள சட்டத்தரணிகளை சந்தித்து, சட்ட உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.
“பிரிடோ நிறுவனம், பாதுகாப்பான புலம்பெயர் தொழில் தொடர்பான பணிகளை செய்து வருகின்றது. எனவே, புலம்பெயர் அபிவிருத்தி பங்களார்களின் குடும்பங்கள் ஏதேனும் சட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தால், அவர்களுக்கு பிரிடோ நிறுவனம் உதவுவதற்கு தயாராகவுள்ளது.
“077-2277425, 077-2277432 என்ற அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டால், அவர்களுக்கு உதவி செய்ய, பிரிடோ நிறுவனம் தயாராக உள்ளது’ என அவர் மேலும் கூறினார்.
“இந்தக் கருத்தரங்கில் முக்கிய வளவாளர்களாக, இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் தமிழ் பகுதி பொறுப்பாளர் நவோதயம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கண்டி கிளை முகாமையாளர் திருமதி பத்மினி குணரட்ன, சட்டத்தரணிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
4 minute ago
15 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
1 hours ago
2 hours ago