2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

Editorial   / 2017 ஜூலை 06 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில், கனிஷ்ட சட்டத்தரணியொருவர் பதில் நீதவானாக கடமையாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நுவரெலியா மாவட்ட நீதிமன்ற சட்டத்தரணிகள், இன்று, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நுவரெலியா மாவட்ட நீதவான் இந்திக ருவன் சில்வா, இன்று விடுமுறையில் சென்றுள்ளதால், பதில் நீதவானாக, கனிஷ்ட சட்டத்தரணியான சுரேஷ் கயன் கடமையில் இருந்துள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

“நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில், சிரேஷ்ட சட்டத்தரணிகள் பலர் இருக்கின்றபோதிலும்,   பதில் நீதவானாக கனிஷ்ட சட்டத்தரணியொருவர் கடமையாற்றுவது பொருத்தமற்றது.   இவ்வாறான செயற்பாடுகளினால், சட்டத்துறையின் கௌரவம் பாதிப்படைவதாக தெரித்தே சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவகின்றனர்” என்று, நுவரெலியா மாவட்ட சட்டத்தரணிகள்   சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி பீ.ராஜதுரை தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .