2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

சட்டத்தை மீறிய வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 06 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி, மஸ்கெலியா நகரில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்கள் சிலவற்றை தற்காலிகமாக மூட மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அதிகாரிகள் இன்று (6) நடவடிக்கை எடுத்தனர்.

மஸ்கெலியா நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் அதிகமானவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவதுடன், கொரோனா மரணங்களும் அதிகரித்து வரும்  நிலையில், நேற்றைய தினம் மஸ்கெலியா நகரில் வர்த்தக நிலையங்கள் சில திறக்கப்பட்டிருந்ததாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன், அவர்களது வர்த்தக நிலையங்களை 14 நாள்களுக்கு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X