R.Maheshwary / 2022 ஜூலை 05 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுஜிதா
லிந்துலை பிரதேச பொது சுகாதார வைத்திய பிரிவுக்குட்பட்ட மெராயா நகரில் அனுமதி இன்றி, சட்டவிரோதமாக இயங்கிய மருந்தகம் (Pharmacy & Lab) ஒன்றை நேற்று (4) சுகாதார அதிகாரிகள் சுற்றி வளைக்கப்பட்டது.
இதன் உரிமையாளர் நீர்கொழும்பு பிரதேசத்தில் வசித்து வருவதாகவும் கடந்த சில மாதங்களாக குறித்த மருந்தகம் மெராயா நகரில் இயங்கி வந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரிக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, பொலிஸாருடன் சென்று பரிசோதனைகளை முன்னெடுத்தபோது, சட்ட ரீதியாக பதிவு செய்தமைக்கான எந்தவித ஆவணமும் இல்லாத காரணத்தினால், குறித்த மருந்தகத்தை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்ததாக பொது சுகாதார வைத்திய அதிகாரி திருமதி ரேஷ்னி துரைராஜ் தெரிவித்தார்.
குறித்த மருந்தகத்தின் உரிமையாளரை தொலைபேசி மூலம் பல தடவைகள் தொடர்பு கொண்ட போதிலும் அவர் பதில் அளிக்கவில்லை என்றும் மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆய்வுக்கூடம் மற்றும் மருந்தகம் ஒன்றை நடாத்தி செல்லும் போது அதற்கென பயிற்சி பெற்ற உத்தியோகத்தர்களை நியமித்திருப்பது சுகாதார சட்டமாகும். இருப்பினும் எந்தவித பயிற்சிகளும் பெறாத அனுமதி இல்லாத உத்தியோகத்தர்களுடன் இந்த ஆய்வுக்கூடம் இதுவரை காலமும் இயங்கி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
13 minute ago
24 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
3 hours ago
3 hours ago