2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 18 பேர் கைது

Editorial   / 2018 ஏப்ரல் 28 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சதிஸ், மு.இராமச்சந்திரன்

பொகவந்தலாவை -  மாவெளி வன பகுதியில் சட்டவிராதேமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 18 பேரை, தலவாகலை விசேட அதிரடி படையினர், இன்று (28) அதிகாலை 05 மணியளவில் கைது செய்ய்பட்டுள்ளனர்.

கைதுசெய்யபட்ட 18 பேரும் பொகவந்தலாவை, கெம்பியன், ரானிகாடு, பெற்றோசோ, லோய்னொன் ஆகிய தோட்ட பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் கைபற்றியுள்ளதாக விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர் .

கைது செய்யபட்ட சந்தேகநபர்களையும் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X