2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக மாடு வெட்டிய நபர் கைது

Editorial   / 2018 ஏப்ரல் 23 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சதீஸ்

தலவாக்கலை விஷேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போது, தலவாக்கலை பகுதியில், சட்டவிரோதமாக மாடு வெட்டிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து, 244 கிலோ இறைச்சியையும் மீட்டு, தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக, தலவாக்கலை, விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர் நேற்று (22) மாலை கைது செய்யபட்டதாக, அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தலவாக்கலைப் பகுதியில் இயங்கும், இறைச்சிக் கடை ஒன்றுக்கு, இறைச்சிகளை வழங்குவதற்காகவே, குறித்த மாடு வெட்டபட்டதாகவும், மேலும் உயிருடன் ஒரு மாடு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேக நபரை, நாளை (23), நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக, தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X