2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சத்துணவு திட்டத்தில் சிறந்த பயனை பெற்றுக்கொள்ளவும்

Freelancer   / 2023 ஏப்ரல் 09 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீடம் மற்றும் உடப்புஸ்ஸலாவை "ஏபர்நெட் லங்கா" ஆடை தொழிற்சாலை இணைந்து உடப்புஸ்ஸலாவை ஆடை தொழிற்சாலையில் ஆரம்பித்துள்ள (NUTRIE POOL) சத்துணவு பரிமாற்ற திட்டத்தின் ஊடாக ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் சிறந்த பயனை தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள வேண்டுமென பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீட சிரேஸ்ட விரிவுரையாளர் அனுராத ஜயவீர தெரிவித்தார்.

ஏபர்நெட் லங்கா" ஆடை தொழிற்சாலை பிரதம முகாமையாளர் என்.எச்.சுதத் நாகசேனவின் தலைமையில் வௌ்ளிக்கிழமை (07) இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாடிய அவர் மேலும் தெரிவித்ததாவது.

இலங்கையில் போசணை குறைப்பட்டுக்கு உள்ளாகியுள்ள நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை பிரதேசத்தில்  (NUTRIE POOL)திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனூடாக நோயற்ற, வலிமையான உடலுக்குத் தேவையான சக்தியை பெற்றுக்கொள்ள தேவையான விற்றமின்கள் அடங்கிய மரக்கறி மற்றும் பழ வகை உணவுகளை தொழிற்சாலை ஊழியர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.

இந்த திட்டத்தின் முன்னேற்றத்துக்கு 18 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு அவர்கள் முன்னெடுக்கும் பணியே இத்திட்டம் வெற்றியளிக்க துணையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த  சத்துணவு பரிமாற்ற திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்க தான் உதவுவதாக தெரிவித்த அவர் உணவு வங்கிக்கு மரக்கறி மற்றும் பழங்கள் அடங்களாக மேலும் உணவு பொருட்களை உடப்புசலாவை வர்த்தகர்களும் வழங்கி வருகின்றமை வரவேற்க கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

                                                                                                                                               ஆ.ரமேஸ்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X