Niroshini / 2021 மே 10 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-துவாரக்ஷான்
சந்தா அறவிடுவதை நிறுத்தி, தொழிலாளர்களையோ, தொழிற்சங்கங்களையோ கம்பனிகளால் அடிப்பணிய வைக்க முடியாது என்று, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
“சந்தாப்பணம் கிடைக்காவிட்டாலும் எமது தொழிற்சங்கப் பணிகள் என்றும் போல் தொடரும். எமக்கு சந்தாப் பணத்தைவிட தோட்டத் தொழிலாளர்களின் நலன்களே முக்கியம்” என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், ஏப்ரல் மாதத்தில் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட்ட பிறகு, தொழிலாளர்களின் சந்தாப் பணத்தை அவர்களின் சம்பளத்திலிருந்து கழித்து தொழிற்சங்கங்களுக்கு அனுப்பி வைக்கும் வழக்கமான நடைமுறையை தோட்ட நிர்வாகங்கள் நிறுத்தியுள்ளன என்றும் இந்தச் செயற்பாட்டின் ஊடாக, தொழிலாளர்களையோ தொழிற்சங்கங்களையோ அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது என்பதை கம்பனிகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதற்காக தொழிற்சங்க உரிமையை விட்டுக் கொடுக்கமுடியாது எனத் தெரிவித்த அவர், சந்தாவை நிறுத்தினாலும் தொழிற்சங்கத்தின் வழமையான பணிகளை முன்னெடுப்பதில் பின்வாங்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
“சந்தாவை நிறுத்துவதன் மூலம் வேலைப் பளுவை அதிகரித்து அவர்கள் அனுபவித்து வரும் சலுகைகளைக் குறைத்து தொழிலாளர்களை ஆட்டிப் படைத்து அடக்கி வைக்கவும், தொழிற்சங்க கலாசாரத்தை இல்லாமல் செய்து விடலாம் என்று அவற்றை முடக்கி வைக்கவும் கம்பனிகள் கனவு கண்டு வருகின்றன. தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகளை தோற்றுவித்து பிளவுகளை ஏற்படுத்தி குளிர் காயலாம் என்று முதலாளி வர்க்கம் எதிர்பார்க்கின்றது. ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்கி தொழிற்சங்க உரிமையைப் பறிப்பதற்கு ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டோம். அதற்காக அற்ப சொற்ப சலுகைகளுக்கு விலைபோகவும் மாட்டோம்” என்றும் தெரிவித்தார்.
23 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago