2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சப்ரகமுவ மாகாண சபையின் புதிய உப-தலைவர் தெரிவு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபையின் உப-தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் உதயகாந்த குணதிலக்க, 9 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாண சபையின் மாதாந்த கூட்டம் செவ்வாய்க்கிழமை (13), சபை தலைவர் கஞ்சன ஜயரத்ன தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, மேற்படி மாகாண சபையில் வெற்றிடமாக காணப்பட்ட உப-தலைவரை  நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.

மாகாண சபையின் ஐ.ம.சு.கூ உறுப்பினர் உதயகாந்த குணதிலக்கவை உப-தலைவராக நியமிக்குமாறு ஆளும்கட்சியின் மாகாண சபை உறுப்பினர் இந்துனில் சாந்த முன்மொழிந்தார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நிமால் விஜேநாயக்கவை உப-தலைவராக நியமிக்குமாறு ஐ.தே.க. மாகாண சபை உறுப்பினர் அஜித்குமார மெந்தேகம முன்மொழிந்தார்.

ஐ.ம.சு.கூ உறுப்பினர்கள் 23 பேரும் ஐ.தே.க. உறுப்பினர்கள் 14 பேருமாக மொத்தம் 37 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர்.

வாக்களிப்பின்போது 23 உறுப்பினர்கள் உதயகாந்த குணதிலக்கவுக்கு ஆதரவாகவும் 14 உறுப்பினர்கள் நிமால் விஜேநாயக்கவுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். இதில்  9 மேலதிக வாக்குகளால்   உதயகாந்த குணதிலக்க உப- தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

இம்மாகாண சபையின் இ.தொ.கா. உறுப்பினர்களான கணபதி இராமச்சந்திரன், அண்ணாமலை பாஸ்கரன் உட்பட ஆளும் கட்சியில் உள்ள மாகாண சபை உறுப்பினர்கள் 6 பேர் சபைக்கு சமூகமளிக்காத காரணத்தால் அவர்கள்; வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

சப்ரகமுவ மாகாண சபையின் உப- தலைவராக தெரிவு செய்யப்பட்ட உதயகாந்த குணத்திலக்க, செவ்வாய்க்கிழமை (13) சபை தலைவர் கஞ்சன ஜயரத்ன முன்னிலையில் சத்தியப்பிரமாணமும் செய்துகொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X