2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சப்ரகமுவ மாகாணத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

Sudharshini   / 2015 நவம்பர் 12 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பசும்பால் உற்பத்தியை அதிகரிக்க சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் கேகாலை மாவட்டத்தில் வரக்காபொல, ரம்புக்கனை ஆகிய தேர்தல் தொகுதிகளை இலக்காகக் கொண்டு அப்பகுதிகளில் கால்நடை கிராமங்களை அமைத்து கால்நடை விவசாயிகளுக்கு யுகுளு என்று அழைக்கப்படும் உயர் ரக இனத்தைச் சேர்ந்த 200 பசு மாடுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக சப்ரகமுவ மாகாண சபை 100 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதுடன், விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள பசு மாடுகள் அனைத்தும் கூட்டுறவு நிலையத்தின் மூலம் காப்புறுதி செய்யப்படவுள்ளன.

அத்தோடு, கால்நடை விவசாயிகளிடமிருந்து பசும் பால் கொள்வனவு செய்வதற்காக மேற்படி பகுதிகளில் உள்ள பத்து இடங்களில் பால் கொள்வனவு செய்யும் கூட்டுறவு நிலையங்களை அமைப்பதற்கும் சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்படி பால் கொள்வனவு செய்யும் கூட்டுறவு நிலையங்கள் அமைப்பதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 15,000 லீற்றர் வரை பாலை கொள்வனவு செய்ய முடியும் எனவும் இதன் மூலம் மேற்படி கிராமங்களிலுள்ள 1,000 கால்நடை விவசாயிகள், மாதாந்தம் 12 இலட்சம் ரூபாய் வரை வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, பசுவின் சாணத்தால் கொம்போஸ் உரம் உற்பத்தி செய்து அதை விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகள் தமது ஆதாயங்களை மேலும் பெருக்கிக்கொள்ள முடியும். இதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கும் சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் இரத்தினபுரி மற்றும் கேகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் பசும் பால் உற்பத்தி செய்யும் கால்நடை கிராமங்களை அமைப்பதற்கும் சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளதோடு இதை கண்காணிப்பதற்காக மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் விசேட குழு ஒன்றையும் நியமித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .