2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் 23ஆம் திகதி ஆரம்பம்

Editorial   / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின், அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகுமென, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர், வீ.டீ.கித்சிறி தெரிவித்துள்ளார்.

அனைத்து பீட மாணவர்களும், 22ஆம் திகதி, தத்தமது விடுதிகளுக்கு சமுகமளிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 44 நாட்களாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பானது, 17ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கொடுப்பனவுகளை, 10 சதவீதத்தால் அதிகரிப்பது தொடர்பான சுற்றுநிருபத்தை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக, கடந்த 12ஆம் திகதி வெளியிட எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, கல்வி சாரா ஊழியர்களால் இரண்டு மாதத்திற்கும் அதிகமாக முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பானது, கடந்த 17ஆம் திகதி கைவிடப்பட்டது.

இதற்கமைய, சித்திரைப் புத்தாண்டு விடுமறையின் பின்னர், இன்றைய தினம் (17), அனைத்து பணியாளர்களும் கடமைக்குத் திரும்புகின்றனர். எனினும், இணக்கம் தெரிவிக்கப்பட்ட 10 சதவீத கொடுப்பனவை, ஜனவரி மாதத்திலிருந்து அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், இது ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்படுமென சுற்றுநிருபத்தில் வெளியிடப்பட்டுள்ளதால், இதுதொடர்பான தனியான கலந்துரையாடலை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் எட்வர்ட் மத்வத்த தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X