Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஏப்ரல் 19 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சப்ரகமுவ மாகாண இப்தார் நிகழ்வு இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத்தொகுதயில் திங்கட்கிழமை (17) சிறப்பாக இடம்பெற்றது.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவின் ஆலோசனைக்கமைய சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சினால் முதல் முறையாக மேற்படி இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ,
இம்மாதம் 7ஆம் திகதி கிறிஸ்தவர்களின் பெரிய வெள்ளி மற்றும் 14ஆம் திகதி தமிழ்- சிங்கள புத்தாண்டும் இடம்பெற்றது. ஏதிர்வரும் 22ஆம் திகதி இஸ்லாமியர்களின் ரமழான் பெருநாளும் இடம்பெற உள்ளது.
சர்வமத நிகழ்வுகள் அனைத்தும் இந்த ஏப்ரல் மாதத்திலேயே வருவது சர்வ மதங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடியதாக அமைகின்றது என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மௌலவிமார்கள் மற்றும் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னால் உறுப்பினர்களான ஹெய்யா எம்.இப்ளார், நிஹால் பாருக், சப்ரகமுவ மாகாண பிரதான செயலானர் மஹிந்த எஸ்.வீரசூரிய, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குனரத்ன, சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரத்ன, இரத்தினபுரி மாவட்ட முஸ்விம் சம்மேளனத்தின் உறுபினர்களான எம்.எம்.இஸ்மத், ஏ.எம்.ஏ.சுல்பிகார் மற்றும் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களை சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்கள்ää அரச அதிகாரிகள், கல்வி அதிகாரிகள், அதிபர் அசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவாணி ஸ்ரீ
4 hours ago
4 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
19 Jul 2025