சிவாணி ஸ்ரீ / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
கிறிஸ்மஸ் தினத்தையொட்டி, சப்ரகமுவ மாகாண சபையால் முதலாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிறிஸ்மஸ் நிகழ்வு, எதிர்வரும் 25ஆம் திகதி, இரத்தினபுரி புனித வின்செட் சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் கொண்டாடப்படவுள்ளதாக, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.
இலங்கை வாழ் மக்களது கலாசாரத்தில் நட்பை ஏற்படுத்துவதற்கு, சப்ரகமுவ மாகாண சபையும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமையவே, சப்ரகமுவ மாகாணத்தில் முதலாவது தடவையாக, மாகாண கிறிஸ்மஸ் நிகழ்வு கொண்டாடப்படவுள்ளது என்றும் இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 95 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இரத்தினபுரி புனித வின்செட் சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில், 5 வயது தொடக்கம் 18 வயதுடைய, 68 சிறுவர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
36 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago