Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Sudharshini / 2015 நவம்பர் 02 , மு.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
'தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு, ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என பொதுத் தேர்தல் காலப்பகுதியில் அறிக்கை விட்டு மக்களை ஏமாற்றியவர்கள், சம்பள விடயத்தில் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை கேலிக்குரிய விடயம்' என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
'தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளம் பெற்றுத் தருவோமென்று கூறியவர்கள் இன்று தடுமாற்றமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு 1,000 ரூபாய் சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்கள் பெறக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதெனவும் இது தமக்குக் கிடைத்த பாரிய வெற்றி என்று பொதுத் தேர்தலுக்கு முன்பு ஊவா மாகாணத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் அறிக்கை விட்டிருந்தார்.
தேர்தலுக்குப் பிறகு அந்த விடயம் பொய்யாகிவிட்டது. இதன் பின்பு கூட்டொப்பந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தமக்கு பலமில்லை என்று அவர் அறிக்கை விட, அவர் சார்ந்த தொழிற்சங்கத்தின் தலைவர் அவ்வாறு நாம் பலமிழக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
ஆகவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளத்தை பெற்றுத்தருவோமென்று கூறியவர்கள் இன்று தொழிலாளர்கள் மத்தியில் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
எனவே, கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள், தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு முன்வர வேண்டும். மாறாக விதண்டாவாத கருத்துக்களால் தோட்டத் தொழிலாளர்கள் நன்மையடையப் போவதில்லை' என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago