Janu / 2024 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா, தின சந்தை கட்டிடம் இலக்கம் 15 ஏ முகவரியில் வசிக்கும் கருப்பையா கோபு என்பவர் அகில இலங்கை சமாதான நீதவானாக நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரபுதிகா லங்காங்கனி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (13) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் கந்தப்பளை கொங்கோடியா தோட்டத்தை சேர்ந்த கருப்பையா மற்றும் காந்திமதி தம்பதிகளின் புதல்வராவார்.
கந்தப்பளை மெதடிஸ்ட் கல்லூரியின் பழைய மாணவரான இவர் நுவரெலியா ஹோட்டபீல்ட் டிரைவ் ஆங்கில பாடசாலையின் ஆங்கில பட்டதாரி மாணவராவார்.
மேலும் கந்தப்பளையில் இயங்கிய கோபு கல்வி நிறுவன உரிமையாளரான இவர் சமய கலாசாரம் சார்ந்த சமூக சேவையில் அதிதியாக ஈடுபாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஸ்

20 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago