2025 ஜூலை 23, புதன்கிழமை

’சமுர்த்தி பயனாளர்களின் “பெயர்பட்டியல் காட்சிக்கு வைக்கப்படும்”

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

2015 ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளின் பெயர் விவரங்கள் அடங்கிய பெயர்பட்டியல், எதிர்வரும் சனிக்கிழமை முதல் 12 ஆம் திகதிவரை, காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக, நோர்வூட் சமுர்த்தி வங்கி முகாமையாளர் வின்சன் ஜெயபிரகாஸ் தெரிவித்தார்.

அம்பமுவ பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நோர்வூட் சமுர்த்தி வங்கியின் கீழ் இயங்கும் 22 கிராம சேவகர் பிரிவின் சமுர்த்தி உத்தியோகஸ்தர் காரியாலயம் மற்றும் நோர்வூட் சமுர்த்தி வங்கியிலும் மேற்படி பெயர் பட்டியல், காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.

இதற்கூடாக, சமுர்த்தி பயனாளிகள் தெரிவு தொடர்பில், பொதுமக்கள் தங்களது கருத்துகளையும் தகவல்களையும் அம்பகமுவ பிரதேச செயலகத்தில் தெரியப்படுத்த முடியுமென்று அவர் மேலும் கூறினார்.

மேலும், சமுர்த்தி நிவாரணத்துக்காக விண்ணப்பித்த அனைவரும் தங்களது நிவாரணம் தொடர்பிலான தகவல்களையும் பார்வையிட முடியும் என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .