2026 மே 02, சனிக்கிழமை

சமுர்த்தி வழங்கும் வேலைத்திட்டம் அம்பாறையில் ஆரம்பம்

Editorial   / 2020 ஏப்ரல் 13 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

சமுர்த்தி பெறுவதற்கு தகுதியான குடும்பங்களுக்கான ரூபாய் 5 ஆயிரம் மானியமாக வழங்கக்கூடிய வேலைத்திட்டத்தை, அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளதாக அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ், இன்று திங்கட்கிழமை (13) தெரிவித்தார். 

சமுர்த்தி நிவாரணம் பெறாத ஆனால் சமுர்த்தி நிவாரணம் பெறத் தகுதியான குடும்பங்களுக்கான மானியக் கொடுப்பனவு, 05 ஆயிரம் ரூபாயை தொடர்ந்து வழங்கி வருவதாகவும் இத்திட்டமானது, 20 பிரதேச செயலகங்களை ஒருங்கிணைத்து சுமார் 43 சமுர்த்தி வங்கிகளின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதனடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் சுமார் 90 ஆயிரத்தி 128 சமுர்த்தி நிவாரணம் பெறக்கூடிய தகுதியான குடும்பங்கள் காணப்படுகின்றன என்றும் அதில் முதல்கட்டமாக, அரசாங்கத்தின் ஆலோசனைப்படி சுமார் 60 ஆயிரத்தி 125 பேருக்கான சகன பியவர இலகு கடன் வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மாவட்ட சமுர்த்தி காரியாலய உள்ளக கணக்காய்வு பிரிவு, வங்கியின் முகாமைத்துவப் பிரிவு 24 மணித்தியாலமும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இக் கொடுப்பனவுகள் பெறுவது தொடர்பாக அம்பாறை மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை, 0760707125, 0777004761 மற்றும் 0777531024 ஆகிய தொடர்பிலக்கங்கள் ஊடாக முறையிட முடியும் எனவும், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .