R.Maheshwary / 2022 ஜனவரி 12 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.புவியரசன்
பதுளை -கந்தேகெதர பகுதியை தளமாகக் கொண்டு கடந்த வருடத்தின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட "மலையக விழிகள்" அமைப்பானது, நம்நாட்டிலிருந்து வாழ்வாதாரம் தேடி மத்திய கிழக்குக்குச் சென்றுள்ள நம்மவர்களின் எண்ணக்கருவில் உதயமாகியுள்ளது.
இதுவரை 30 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, கொவிட் தொற்று நிலவிய காலப்பகுதியில் பாடசாலைகளுக்கு தொற்று நீக்கிகளும் வழங்கப்பட்டன. வறுமை கோட்டின் வாழும் மக்களுக்கு இதுவரை 50 வேலைத்திட்டங்களில் உலர் உணவுப் பொதிகள் மத்திய, ஊவா மாகாணங்களில் வழங்கப்பட்டுள்ளன.
தவிர, விசேட தேவையுடையவர்களுக்கு சக்கர நற்காலிகள், சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ செலவிற்கான நிதியுதவிகள் என்பன தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வமைப்பின் தலைவராக குகன் செயற்படுவதோடு, செயலாளராக பிரசாந், பொருளாளராக நேசராஜன் ஆகியோரும் இணைப்பாளர்களாக மூர்த்தி, கிறிஸ்டோபர், விஜயா மற்றும் புவனேஸ் ஆகியோரும் ஆலோசகர்களாக அதிபர் கனகரட்ணம், கிருஸ்ணா ஆகியோரும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
5 minute ago
37 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
37 minute ago
37 minute ago