2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

சமையலறையில் நிர்வாணமாக இருந்தவர் பணத்துடன் மாயம்

Janu   / 2025 ஜூலை 10 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, அளுத்கோட  தச்சு பாடசாலைக்கு அருகில் உள்ள வாடகை வீடொன்றுக்குள் நிர்வாணமாக நுழைந்த ஒருவர்  19,000 ரூபாய்  பணத்தை திருடிச் சென்றுள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அன்று  இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டார் தங்கள் இரண்டு குழந்தைகளுடன், வேலை வசதிக்காக இந்த வீட்டில் வசித்து வருவதுடன் திங்கட்கிழமை (07) அன்று, அனைவரும்  , இரவு உணவு சாப்பிட்டு, புலமைப்பரிசில் தேர்வுக்கு வரவிருந்த மூத்த மகனுக்கு பாடம் சொல்லி விட்டு, இரவு 11 மணியளவில் தாய் படுக்கைக்குச் சென்றுள்ளார்.

மறுநாள்  அதிகாலை 1:45 மணியளவில், இளைய மகனுக்கு ஏற்பட்ட தாகத்தையடுத்து தண்ணீர் குடிப்பதற்காக சமையலறைக்குச் சென்ற போது அடையாளம் தெரியாத ஒருவர் கையில் இரண்டு கருப்பு பைகளுடன் நிர்வாணமாக இருப்பதைக் கண்டு சிறுவன் அலறியதாகவும் அலறல் சத்தத்தை கேட்ட  பெற்றோர் உடனடியாக வந்து வீடு முழுவதும் தேடி பார்த்தபோதும் மர்ம நபரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

பின்னர் வீட்டை சோதனையிட்டு பார்த்த போது  படுக்கையறைக்கு அடுத்த அலமாரியில் துணிகள் கலைந்து கிடப்பதைக் கண்டுள்ளதுடன் அதிலிருந்து   19,000 ரூபாய் பணமும் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.   

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

சுமனசிறி குணதிலக்க


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .