R.Maheshwary / 2021 நவம்பர் 04 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஆசிரியர்- அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான தொழிற்சங்கப் பிரச்சினைக்கு ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஆசிரிய தொழிற்சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (3) கொழும்பிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இலங்கை ஆசிரிய சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், செந்தில் தொண்டமான், கணபதி கனகராஜ், உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில், தான் பாராளுமன்றத்தில் காரணங்களை முன்வைப்பதான இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், தமது கட்சி எப்போதும் தொழிற்சங்கங்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் கட்சியென்றும் தெரிவித்துள்ளார்.
3 minute ago
24 minute ago
33 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
24 minute ago
33 minute ago
50 minute ago