J.A. George / 2020 டிசெம்பர் 28 , மு.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி. கேதீஸ்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பேச்சுவார்த்தை, நாளை (இன்று 28) நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன என மனிதவள நிதியத்தின் முன்னாள் தலைவர் புத்திரசிகாமனி தெரிவித்துள்ளார்.
'துரைமார் சம்மேளனம் கம்பனிகளுடன் மீண்டும் இது தொடர்பாகப் பேசி, ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதால் தொழில் அமைச்சர் அழைத்தாலும் கூட, அதற்கான ஒரு தீர்வு வரக்கூடிய வாய்ப்புகள் இல்லை' என்றார்.
'எனினும், தொழிற்சங்கங்கள் கவனிக்க வேண்டிய ஒரு சில முக்கியமான விடயங்கள் இருக்கின்றன. இன்று கிட்டத்தட்ட தேயிலையின் வருமானம் ஒரு பில்லியன் டொலருக்கு அதிகமாக இருக்கின்றது. டொலர் என்கின்றபோது 150 பில்லியன் ரூபாய்களை வருமானமாக பெறுகின்றது. அதில் தனியார் தோட்டங்களிலிருந்து 60 சதவீதம் என்றாலும்கூட அதில் 60 சதவீதமான வருமானங்களை தோட்டக் கம்பனிகள் பெறுகின்றன' என்றார்.
தோட்டக் கம்பனிகள் போதிய வருமானம் இல்லை என்று சொல்வார்கள் எனின், அதற்கான காரணங்களில் ஒன்று கடந்த சில காலங்களாக, தேயிலைக்கு உரம் இடப்படவில்லை மற்றும் ஏனைய பராமரிப்புச் செலவுகளை முடிந்த அளவு குறைத்துக் கொண்டு இருக்கின்றார்கள் எனத் தெரிவித்த புத்திரசிகாமணி, பல தோட்டங்களில் தேயிலை மலைகள் காடுகளாக மாறி வருகின்றன. அதற்குக் காரணம் பராமரிப்பு அங்கு இல்லை. புற்கள் வளராமல் தெளிக்கும் கிருமி நாசினிகள் அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டாலும் கூட பிறகு அதை ஒரு வருடத்துக்குப் பாவிப்பதற்கு இடமளிப்பதாக அரசாங்கம் அன்று கூறியது. அதை எந்த அளவுக்கு அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாகும் என்றார்.
'அரசாங்கம் கூறுவதைப்போல் ஒரு மில்லியனுக்கு அதிகமான வருமானத்தை பெறுகின்ற தேயிலை, இறப்பர் போன்றவற்றில் கம்பனிகள் விற்பனை பார்க்கின்றபோது உற்பத்தி செலவையும் டொலர் கணக்கிலே பார்க்க வேண்டும். கம்பனிகள் 40 சதவீதமாக இருந்தாலும் தனியார்துறை 60 சதவீதமாக இருந்தாலும் அதனை இருவரும் சமமாகப் பிரித்துக்கொள்ளலாம்' என்றார்.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago