Kogilavani / 2021 பெப்ரவரி 05 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு விடயத்தில், பெருந்தோட்டக் கம்பனிகள் கொண்டுள்ள சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக, இன்று (05) முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றி கண்டுள்ளது என்று, பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், பெருந்தோட்டக் கம்பனிகள் மீது தொழிலாளர்கள் கொண்டுள்ள அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க முன்வந்த அனைத்துத் தொழிற்சங்கங்களுக்கும், இ.தொ.கா சார்பில் தன்னுடைய மனமார்ந்த நன்றிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் நலன்சார்ந்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களை, அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும்போது, அது பாரிய வெற்றிகாண்பதோடு, வரலாற்றிலும் இடம்பிடிக்கின்றன என்றார்.
'இவ்வாறானதொரு நிலையில், பெருந்தோட்ட மக்களின் நலன்சார்ந்து, மலையகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய வர்த்தகர்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் மாற்றுத் தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் மீண்டும் ஒருமுறை, இ.தொ.கா சார்பில் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
'இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு விடயம் தொடர்பில், சம்பள நிர்ணயச் சபையில் 8ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின்போது, தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும். அதற்கு, இன்றைய இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம், பெரும் அழுத்தமாக அமையும் என்பது நிச்சயம்.
மீண்டுமொருமுறை, இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஒத்தழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும், இ.தொ.கா சார்பில் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்றும் தெரிவித்தார்.
25 minute ago
33 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
54 minute ago