Kogilavani / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி, எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள சம்பள உயர்வுப் போராட்டத்தில், இரத்தினபுரி மாவட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும் என்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபசெயலாளர் ரூபன் பெறுமாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், ஆயிரம் ரூபாய் நாளாந்த சம்பள உயர்வு, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பல வருடங்களாக பல தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், முதலாளிமார் சம்மோளனம் அதற்கான எவ்வித நடவடிக்கையையும் எடுக்காமால் ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்க மறுப்பு தெரிவித்து வருகின்றது என்று சாடினார்.
இந்நிலையில், ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடியதான நியாயமற்ற வரைபை, முதலாளிமார் சம்மேளனம் சமர்பித்துள்ள நிலையில், அது தொழிலாளர்களுக்கு பாதகமான நிலையில் காணப்படுவதால் தொழிற்சங்க தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்றார்.
'பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக தீர்மானிப்பதற்கான பேச்சுவார்த்தை, சம்பள நிர்ணயச்சபை ஊடாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது. இப்பேச்சுவார்த்தை வெற்றிபெறவும் முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் பெப்ரவரி 5ஆம் திகதி பாரிய அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தீர்மானித்துள்ளார்.
'எனவே, இந்தப் போராட்டத்துக்கு அரசியல், தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால், இரத்தினபுரி மாவட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் ஆதரவை வழங்க வேண்டும்' என்று, இ.தொ.காவின் உபசெயலாளர் ரூபன் பெருமாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
25 minute ago
33 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
54 minute ago