Ilango Bharathy / 2021 ஜூலை 07 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
சர்வதேச தொழிலாளர் சம்மேளனம்,தொழில் ஆணையகம், ஆகியவற்றின் செயற்பாடுகள் குறித்து முழுமையாக தெரியாமல், இவ்வாறு முறையிட்டுவிட்டோம், நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என்று தெரிவிப்பது தொழிலாளர்களை ஏமாற்றும் ஒரு கண்துடைப்பு செயலாகும் என முன்னாள் பிரதி நீதி அமைச்சரும் சிரேஷ்ட தொழிற்சங்கவாதியுமான வடிவேல் புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தோட்டத் தொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் (ILO)சர்வதேச தொழிலாளர்கள் சம்மேளனத்தில் முறையீடு செய்வது தொழிலாளர்களை திருப்திபடுத்துவதாகஅமையுமே தவிர, இதனால் எந்தவித பிரசோசனமும் கிடையாது” என்றார்.
அத்துடன் ”தொழிலாளர் சம்மேளனம் (ILO) நடவடிக்கை எடுக்க பொலிஸ்காரர்களோ அல்லது நீதிமன்றமோ கிடையாது” எனவும் சுட்டிக்காட்டினார்.
மலையக மக்களை பிரதநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் வாதிகள்
தோட்டத் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச தொழிலாளர்
சம்மேளனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்து, ஊடகங்கள் ஊடாக
வெளியான செய்தியை மேற்கோள்காட்டி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தில் செய்யப்படும் முறைப்பாடுகள் குறித்து, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உலக தொழிலாளர் சம்மேளனம் அதற்குறிய சபை அமர்வில் முன்மொழிந்து அறிக்கையிட்டு கேட்டறிய முடியுமே தவிர அரசாங்கத்திற்கோ,தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட திணைகளங்களுக்கு எதிராக எந்தவோர்நடவடிக்கையும், உத்தரவையும் இடமுடியாது.
தொழற்சங்கம் என்ற வகையில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை
தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை முகாமைத்துவம் படுத்தும் தரப்பினரிடத்தில்
பேசமுடியும்,அதற்கு அப்பால் சென்று சட்ட நடவடிக்கைகளையும், நீதிமன்ற நடவடிக்கைகளையும் எடுக்க முடியும் அதை செய்வதற்கு தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும் என்றார்.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026