R.Maheshwary / 2021 மே 30 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
ஜூன் மாதம் 3 ஆம் திகதி முதல் ஜெனிவாவில் நடைபெறும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் 109 வது சர்வதேச தொழிலாளர் மhநாட்டில் (சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாகவும் இலங்கை பிரதிநிதியாகவும் தான் பங்கேற்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் வெளி விவகாரங்களுக்கு பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் தான் பரிந்துரைக்கபட்டுள்ளதாகவும் வரலாற்றில் முதல் முறையாக இணைய வழியாக ஊடாக நடைபெறும் இம்மாநாட்டில் இளம் தொழிலாளர் பிரதிநிதியாகவும் தான் பங்குபற்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டு இந்த கூட்ட தொடர் நடைபெறாவிடினும் இவ்வாண்டு இணையவழியினுடாக 187 நாடுகள் பங்கேற்கும் இம்மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க உள்ளதாகவும் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி இதற்கான குழு நிலை கூட்டம் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இம்மாநாட்டில் கொவிட் 19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழில் துறைகள் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. இதில் கொவிட் 19 தாக்கம் காரணமாக இலங்கையின் தொழித்துறை முகம் கொடுத்த சவால்கள் தொடர்பாகவும் விசேடமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் நாளாந்த தொழில் புரியும் தொழிலாளர்கள் தொடர்பாகவும் தான் உரை நிகழ்த்தவுள்ளதாகவும் மேலும் இக் கூட்டத்தொடரின் இறுதியில் வெளிவர இருக்கும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் ஆவணத்தில் கொவிட் 19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் தொழில் உறுதி, அனைத்து தொழிலார்களுக்கான தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பு, தொழில் புரியும் ஸ்தானத்தில் சுகாதார பாதுகாப்பு, தொழிலார்களுக்கான தகவல் தொழில்நுட்ப கல்வி மற்றும் பெண் தொழிலார்களுக்கான பாதுகாப்பும் முன்னுரிமையும் போன்ற விடயங்களை வலியுறுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
20 minute ago
31 minute ago
38 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
31 minute ago
38 minute ago
57 minute ago