2025 ஜூலை 02, புதன்கிழமை

சலுகைகள் குறைப்பு

Kogilavani   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்

தலவாக்கலை (சென்கூம்ஸ் தோட்டம்), தேயிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு  கடந்த அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்பட்ட பொது வேலையாட்களுக்கு சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

மஹிந்த ராஜக்ஷவின் ஆட்சிக் காலத்தில்  தலவாக்கலை, கண்டி, இரத்தினபுரி, பதுளை, பசறை, கொட்டாவ, கொடபொல ஆகிய  இடங்களிலுள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையங்களுக்கு நூற்றுக்கும் அதிகமான பொது வேலையாட்கள் நியமிக்கப்பட்டனர்.  

ஏனைய பிரதேசங்களில் நியமனம் பெற்றவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் தமக்கு கிடைக்கவில்லை என தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் நியமனம் பெற்றுள்ள வேலையாட்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அடிப்படை சலுகைகள், விடுதியில் அனுபவிக்கும் சலுகைகள், தேநீர் இடைவேளைக்கு வழங்கப்படும் பொருட்கள், போக்குவரத்து சலுகைகள் உள்ளிட்டவற்றை நிர்வாகம் தமக்கு உரிய முறையில் வழங்குவதில்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.

'ஏனைய பிரதேசங்களில் நியமிக்கப்பட்ட சக தொழிலாளர்களுக்கும் கிடைக்கும் அனைத்து வித சலுகைகளும் எமக்கும் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக பெருந்தோட்ட அபிவிருத்திதுறை அமைச்சர் நவீன் திசாநாயக்க ஆராய்ந்து பாரபட்டசமற்ற சலுகைகளை வழங்க முன்வர வேண்டும்' என ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .