2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சளி அடைத்து 5 மாத சிசு மரணம்

Simrith   / 2025 ஜூலை 03 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம் பிரிவில் இடம் பெற்று உள்ளது.

நேற்று மாலை சிசுவிற்கு சளி அடைப்பு ஏற்பட்டதையடுத்து பெற்றோர் முச்சக்கர வண்டியில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வந்த வேளையில் வைத்திய பரிசோதனை மேற்கொண்ட போது சிசு மரணம் அடைந்த நிலையில் உள்ளது தெரிய வந்தது.

சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

புரவுன்சீக தோட்ட மோட்டிங்ஹேம் பிரிவிற்கு செல்லும் வீதி சுமார் இரண்டு கிலோ மீட்டர் வரையில் மிகவும் குன்றும் குழியுமாக உள்ள நிலையில் கர்ப்பிணி பெண்கள் ,குழந்தைகள், நோயாளிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பாரிய இன்னலுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளது எனவும் இந்த இரண்டு கிலோ மீட்டர் வீதியை தோட்ட நிர்வாகம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செப்பனிட்டுத் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மஸ்கெலியா நிருபர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .