Editorial / 2025 நவம்பர் 09 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்ற கொத்மலை புரட்டாசி (புரட்டொப்) பூச்சிகொட தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 26 வயது தாய், தனது எஜமானரினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு நோய்வாய் பட்டிருப்பதால் தனது மனைவியை மீட்டு தருமாறு மேற்படி பெண்ணின் கணவர் ஆர். விக்னேஸ்வரன் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரியுள்ளார்.
விக்னேஸ்வரன் இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் புகார் அளித்தபோது அவர்களின் ஆலோசனையின் பேரில் தர்ஷினியை வெளிநாட்டுக்கு அனுப்பிய வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் சென்று முறையிட்ட போது , அவர்கள் தன்னை தாக்கியதாகவும் விக்னேஸ்வரன் எம்மிடம் கூறினார்.
இது தொடர்பாக விக்னேஸ்வரனால் கொழும்பில் உள்ள வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் கடந்த 27 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
மேலும் தனது கணவருக்கு வீடியோ கோலில் தர்ஷினி கூறும் பொழுது தனக்கு வழங்க வேண்டிய நான்கு மாத நிலுவையில் உள்ள சம்பளத்தை கேட்டபோது, வீட்டின் உரிமையாளரின் காவல்துறையில் உயர் பதவியில் இருக்கும் அவரது மகன் வந்து தனது மனைவியை கடுமையாகத் தாக்கி தனது கால்களை பொலிஸ் காலணிகளால் மிதித்தும் முகம், தலை மற்றும் மார்புப் பகுதியில், இருந்து இரத்தம் வரும் வரை காலணிகளால் மிதித்து அழுத்தியதாகவும் தற்பொழுதும் காது மூக்கில் இருந்து இரத்தம் வருவதாக தனது மனைவி கூறியதாக விக்னேஸ்வரன் கூறினார்
இறுதியாக விக்னேஸ்வரனுக்கு தர்ஷினி சனிக்கிழமை தொலைபேசியில் மீண்டும் தொடர்பு கொண்டு மீண்டும் தான் தாக்கப்படுவதாகவும் குறித்த வீட்டில் இருந்து தன்னை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லத் தயாராகி வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து விக்னேஸ்வரன் நுவரெலியாவில் அமைந்துள்ள வெளியுறவு சேவை அலுவலகத்திற்குச் சென்று முறையிட்டுள்ளார்
அங்கிருந்த அதிகாரி ஒருவர், நீங்கள் விரும்பியபடி பெண்களை அனுப்பவும் நாட்டிற்கு அழைத்து வரவும் முடியாது பெண்களைப் பராமரிக்க முதுகெலும்பு இல்லை என்றால் எங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் . இப்படி நாட்டுக்கு அழைத்து வர விரும்பினால், அவர்களுக்கு எட்டரை லட்சம் ரூபாய் செலுத்த வேண்டி வரும் . இறந்தாலும் பிணத்தை கொண்டுவருவதற்கும் பணம் வேண்டும் என கூறியதாக கூறுகிறார்
தான் உரிய இடங்களில் முறைப்பாடு செய்தும் யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை என்றும் ஆகவே, தயவு செய்து தனது மனைவியை மீட்டு தருமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக கூறினார்.
15 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago