2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சாமி வரம் கொடுத்தது ; சாமிமலை பதுக்கியது

Freelancer   / 2023 ஏப்ரல் 09 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாமி வரம் கொடுத்தாலும் பூ​சாரி இன்னுமே வரம் கொடுக்கவில்லை என பலரும் புலம்புவதைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேபோலதான், பொருட்களின் விலைகளை அரசாங்கம் கொடுத்தாலும், வர்த்தகர்கள் இன்னுமே குறைக்க​வில்லை என்றக் குற்றச்சாட்டு நிலவுகின்றது.

சமையல் எரிவாயுவின் விலை குறைந்துள்ளது. எனினும், மஸ்கெலியா, சாமிமலை நகரிலுள்ள மூன்று காஸ் நிறுவனங்களில் விலை குறைக்காமல் பழைய விலைக்கே விற்பனைச் செய்யப்படுகின்றன என காஸ் நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அந்த விற்பனை நிலையங்களில் முன்னைய விலைக்கு இன்னும் விற்பனை செய்யப்படுவதாக அங்குள்ள நகர, கிராம மற்றும் பெருந்தோட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில்,  ‘1927’ என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்துள்ளதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர். புத்தாண்டுக்கு ஆகக்கூடுதலான விலைக்கு காஸ் விற்பனைச் செய்யும் நோக்கிலேயே, இவ்வாறு பழைய விலைக்கு உரிய காஸ்களை பதுக்கி வைத்துக்கொள்வதுடன், விலை குறைந்த காஸ்களை அந்த மூன்று விற்பனை நிலையங்களைச் சேர்ந்தவர்களும் இன்னும் கொள்வனவு செய்யவில்லை என்றும் மக்கள் தெரிவித்தனர்.

                                                                                                                                          செ.தி.பெருமாள்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X