2025 டிசெம்பர் 03, புதன்கிழமை

சாமிமலை பெயர் லோன் தோட்டத்தில் 62 பேர் தஞ்சம்

R.Tharaniya   / 2025 நவம்பர் 30 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கன மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் நிலம் தாழ் இறக்கம் காரணமாக 17 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் சாமிமலை பெயர் லோன் தமிழ் வித்தியாலயத்தில் தஞ்சம் புகுந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (30) அன்றுகாலை வரை அவர்கள் பாடசாலை கட்டிடத்தில் இருந்து வருகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை (30) அன்று காலை முதல் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சீரான காலநிலை ஏற்பட்டு உள்ளது. இப் பகுதியில் நிலைமை வழமைக்கு திரும்பி உள்ளது.

இருந்த போதிலும் மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் பல இடங்களில் மண் திட்டுகள் சரிந்து விழுந்ததில் மண் திட்டுகள் அகற்ற வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நல்லதண்ணி நகரில் உள்ள பொலிஸ் நிலைய பகுதியில் லக்சபான தோட்ட எமில்டன் வனப் பகுதியில் இருந்து பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. உயிர் சேதங்கள் இல்லை பாரிய மரங்கள் சியத்த கங்குல ஓயாவில் கிடைப்பதை காணக் கூடியதாக உள்ளது. நல்லதண்ணி பிரதான வீதியில் லக்சபான தோட்ட பகுதியில் வீதியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. 

செ.தி.பெருமாள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X