2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சிங்கமலை குளத்தில் விழுந்த சிறுவனின் சடலம் மீட்பு

R.Tharaniya   / 2025 ஜூலை 09 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது சிறுவன் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  ‌

செவ்வாய்க்கிழமை (08) அன்று மாலை  நண்பர்களுடன் சிங்கமலை குளம் பகுதிக்கு  புகைப்படம் எடுக்க சென்ற போது தவறி விழுந்து காணாமல் போயுள்ளார் 

கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரியில் சாதாரண தரம் கற்று பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த நாவலப்பிட்டி தொலஸ்பாகை பிரதேசத்தை சேர்ந்த  பாண்டியன் தமிழ்மாறன் என்ற சிறுவனே  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார்  தேடும் பணியினை மேற்கொண்ட போதும் தேட முடியாத நிலையில்  இராணுவம் மற்றும் இரங்கன கடற்படை முகாம் சுழியோடிகளின் உதவியுடன் புதன்கிழமை (09) அன்று தேடிய நிலையில் ஆற்றின் உள்ளிருந்து  பிற்பகல்  சடலம் 02.30 மணியளவில் சடலமாக மீட்டனர்.

பெற்றோர் வெளிநாட்டில் பணி புரிவதுடன் ஹட்டன்பிரதேசத்தில் வாடகை வீடொன்றில்  தங்கியிருந்து கல்வி கற்று வருவதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்த பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X