Editorial / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
"உலக உரிமை சொத்தாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சிங்கராஜ வன எல்லைக்குள், மணல் அகழ்வதற்காக புவிச்சரிதவியல், கனியவள திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளமைக்கு, இரத்தினபுரி மாவட்ட கமத்தொழில் இணைப்புக்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி இணைப்புக் குழுக் கூட்டம், நேற்று (30) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் அனைவரும் மேற்படி விடயத்துக்கு எதிராகக்கடும் கண்டனத்தை முன்வைத்தனர்.
இரத்தினபுரி இணைப்புக்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, சிங்கராஜ வனத்தினுள் அல்லது அதன் 500 மீற்றர் எல்லைப் பகுதிக்குள் மணல் அகழ்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனினும் இரத்தினபுரி மாவட்ட இணைப்புக் குழு கூட்டம், ஏனைய இணைப்புக் குழு கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களையும் மீறி இப்பகுதியில் மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்நடவடிக்கைக்கும் தமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 minute ago
42 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
42 minute ago
9 hours ago