2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சிசுவின் உயிரைக் குடித்த கட்டில்வேலி

Editorial   / 2023 மார்ச் 25 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆறு மாதங்களேயான சிசு, கட்டிலை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மரப்பலகையிலான வேலிக்குள் சிக்குண்டு பரிதாபமாக மரணமடைந்த சம்பவமொன்று ஊவா பரணகம ஒஸ்பென்ன கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

கட்டிலில் இருந்து கீழே விழுந்து விடாதவகையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பலகையிலான வேலியில் சிக்கி இறுகியே மரணமடைந்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த சிறுவின் தாய், தனது குழந்தையை கட்டிலில் கிடத்தி நித்திரைக்கொள்ள செய்துவிட்டு, வீட்டுவேலைகளை கவனித்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் குழந்தை எழும்பாமையால் வீட்டுக்குள் வந்து பார்த்தபோதே, அக்குழந்தை இறுகியிருந்தமையை கண்டுள்ளார். அதன்பின்னர், அக்குழந்தை மீட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

அங்கு பரிசோதனை செய்த வைத்தியர், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.  

மரண பரிசோதனைக்காக அந்த சிசுவின் சடலம்  தியத்தலாவை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .