2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

சிசுவின் சடலம் மீட்பு; பெண் கைது

Kogilavani   / 2017 ஜூன் 19 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா                     

புத்தல பகுதியிலுள்ள மலசலகூடமொன்றிலிருந்து, பெண் சிசுவின் சடலத்தை, ஞாயிற்றுக்கிழமை  மீட்டுள்ள புத்தல பொலிஸார், சிசுவின் தாயென சந்தேகிக்கப்படும் 35 வயது பெண்ணொருவரையும் கைதுசெய்துள்ளனர்.

புத்தல, குக்குரம்பொலவைச் சேர்ந்த பெண்ணொருவரே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இப்பெண், அதிக இரத்தப் போக்கு காரணமாக, புத்தல வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக, புத்தல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .