2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

‘சிந்தித்து வாக்களிக்க வேண்டும்’

Editorial   / 2020 ஜூலை 27 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக அக்கறையோடும் தமிழ் பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் உறுதியுடனும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பதுளை மாவட்ட மக்கள், சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பதுளை மடுல்சீம பகுதியில், நேற்று மு  (26) மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், “குறைந்தளவு வாக்காளர்களை வைத்துக்கொண்டு பதுளையில் தமிழ் பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதைவிட, வெல்லக்கூடியவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று சிலர் கங்கணம் கட்டி செயற்படுகின்றனர்.

“எனவே தொழிற்சங்க பேதங்களையும் அரசியல் பேதங்களையும் மறந்து வாக்களிக்க வேண்டும். நான்சுய நலத்துடன் செயற்பட்டது கிடையாது. இன்று அரசாங்கம் தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒதுக்கி அவர்களின் வாக்குகள் தேவை இல்லை என கூறுகின்றது. அப்படியானால் வேண்டாம் என கூறுபவர்களுக்கு வாக்களிப்பது நியாயமாகுமா? நாட்டில் அப்பட்டமான இனவாதம் இடம்பெறுகின்றது" என்று அவர் மேலும்  கூறினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .